கோட்டாபய உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சர்வசே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாதிக்கப்பட்ட 200 இலங்கைத் தமிழர்கள் சார்பாக Global Rights Compliance LLP என்ற சட்டவல்லுனர் அமைப்பால் குறித்த தொடர்பாடலானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ரோமச் சட்டத்தின் 15 ஆவது சரத்தின் கீழ் இந்த தொடர்பாடலானது அனுப்பப்பட்டுள்ளது.

அதில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணையினை ஆரம்பித்து, 2021 அக்டோபர் 31 முதல் 2021 நவம்பர் 12 வரையில் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 2021 காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதாக எதிர்பார்க்கப்படும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் சில இலங்கை அதிகாரிகளை சர்வதேச அதிகாரவரம்பு கொள்கையின் கீழ் கைது செய்வதற்கான பிடிவிராந்தை வெளியிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்கு பிரித்தானிய தேசியப் பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரதிநிதித்துவங்களை அனுப்பியுள்ளது.

Leave a Reply