நாட்டில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பித்த பல பாடசாலைகளில் கொரோனா தொற்று உருவாகியுள்ளதென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் இன்னும் 6 முதல் 13 வரையிலான வகுப்புகளுக்குக் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான பரிந்துரைகள் வழங்கப்படவில்லை.
எனினும், சில பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அழைக்கவுள்ளனர் என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனால், ஏற்படக்கூடிய பின்விளைவுகளை அதிபர்கள், ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.






