4 மணித்தியாலத்திற்குப் பின் கோபுரத்தில் இருந்து இறங்கிய இளைஞன்! முடங்கியது ஏ9 வீதி

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் இன்று மாலை தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

தனது மனைவியை அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டுத்தருமாறு கோரியே குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். தனது மனைவி வரும் வரை கோபுரத்திலிருந்து இறங்கமாட்டேன் என தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்திருந்தனர். எனினும், நீண்ட நேரமாகியும் இளைஞரை கீழே இறக்குவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ளாதமையால் கோபமடைந்த இளைஞரின் உறவினர்கள் ஏ9 பிரதான வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தாமதமாகியதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற உதவிபொலிஸ் அத்தியட்சகர், மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், குறித்த இளைஞரின் மனைவியை மீட்டுத்தருவதாக உறுதி வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து, வீதிமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் இளைஞரின் உறவினர்கள் ஒலிபெருக்கி மூலம் கோபுரத்தில் இருந்த இளைஞரை இறங்குமாறு தெரிவித்த நிலையில், அவர்களது வாக்குறுதியை நம்பி 4 மணித்தியாலங்களுக்குப் பின்னர் குறித்த இளைஞர் கீழே இறங்கினார்.

கோபுரத்தில் நின்ற அவர் தனது கையை கூரிய ஆயுதத்தால் அறுத்தமையால் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கோபுரத்தில் ஏறி போராட்டம் நடந்தும் இளைஞன்!

Leave a Reply