
எர்ஸ்டே பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் அலெக்ஸ்ண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிட்சிபாஸ் தனது முதல் சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை 7}6 (8/6), 6}4 என்ற செட்களில் வீழ்த்தினார். அடுத்து அவர் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை சந்திக்கிறார்.
மறுபுறம் போட்டித்தரவரிசையில் 2ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரேவ் 6-2, 7-5 என்ற செட்களில் செர்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச்சை வென்றார். ஸ்வெரேவ் தனது 2ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறார்.
இதர முதல் சுற்றுகளில் நார்வேயின் காஸ்பர் ரட் 7-5, 7-6 (7-2) என்ற செட்களில் தென் ஆப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிஸ வெளியேற்றினார்.
போட்டித்தரவரிசையில் 7ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-4, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் ரைலி ஒபெல்காவை வென்றார். மற்றொரு இத்தாலிய வீரரான லோரென்ஸ் சொனிகோ 6-4, 6-3 என்ற செட்களில் ஜெர்மனியின் டேவிட் கோப்ஃபரை வீழ்த்தினார்.





