பருத்தித்துறை வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

பருத்தித்துறை வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாகஇ நேற்று முன்தினம் (26) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்இ அன்றைய தினமே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்இ

குறித்த பெண்ணுக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில்இ பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

துன்னாலை தெற்குஇ கரவெட்டியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply