முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு கொண்டு சென்றவரை பொலிசார் மடக்கி பிடித்த சம்பவம் நேற்று (27) பதிவாகியுள்ளது
புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மீன் வியாபாரம் செய்வது போல் மீன் பெட்டியில் கசிப்பினை பொலித்தீன் பைகளில் கட்டி, அதற்கு மேல் மீனை வைத்து இரகசியமான முறையில் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில், புதுக்குடியிருப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில் கசிப்பு கொண்டு செல்லப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து, விசேட குழு ஒன்றை அனுப்பி, வள்ளிபுனம் பகுதியில் வைத்து குறித்த கசிப்பினை எடுத்து வந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளார்.
அத்துடன்,55 போத்தல் கசிப்புடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளிலும் பொலிசாரால் பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.









