மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு 25,000 ரூபா அபராதம்!

மது போதையில் வாகனம் செலுத்திய நபரொருவருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இளவாலை பிரதான வீதியூடாக மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் கடந்த 25ம் திகதி இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், நேற்றையதினம் (27) மல்லாகம் நீதிமன்ற நீதிவானிடம் பொலிஸாரால் முன்னிறுத்தப்பட்டார்.

இந்த நிலையில் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் அவருக்கு, இருபத்து ஐயாயிரம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளார்.

Leave a Reply