‘ஒரேநாடு – ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியில், தமிழ்ப்பிரதிந்த ஒருவரேனும் நியமிக்கப்படாமை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விசனம் தெரிவித்துள்ளார்.
அரசின் ‘ஒரே நாடு ஸ்ரீ ஒரே சட்டம் என்ற கொள்கையை நடைமூறையாக்குவதற்காக ஆராய்ந்து, அறிக்கை சமர்பிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 13உறுப்பினர்களைக் கொண்ட செயலணியை நியமித்துள்ளார்.
குறித்த செயலணியில் பொதுமன்னிப்பு பெற்ற (பாவமன்னிப்பு?) ஞானசார தேரரைத் தலைவராகவும், ஒன்பது சிங்களநபர்களும், நான்கு முஸ்லிம்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தமிழரின் பெயரும் இல்லை என்று மனோ கணேசன் கட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் பெயர்கள் இருக்கின்றன என்பதாலேயே முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்படப் போகின்றது என்பதல்ல.உண்மையில் முஸ்லிம்களைத்தான் இங்கே குறி வைக்கிறார்கள்.
அதற்குக் கூடவே துணைக்கு சில முஸ்லிம்களை வைத்துக்கொள்ளப்போகின்றார்கள் என்பதுவே பட்டவர்த்தனம்.
ஞானசாரரைத் தலைவராகப் போட்டால், உள்ளே என்ன நடக்கும் எனப் புதிதாக வகுப்பெடுக்கத் தேவையில்லையே.
பையைத் திறக்காமலேயே பைக்குள் என்ன இருக்கின்றது என விளங்குகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பெயருக்குக்கூட ஒருதமிழரை நியமிக்கமறுக்கும் இந்த மனிதரின் வெறுப்பு மனப்பான்மை வெறுப்பூட்டுவதாகவும் மனோ எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.






