வவுனியா பிரதேச சபையின் உப தலைவர் கொரோனாவால் மரணம்

வவுனியா தமிழ் பிரதேச சபையின் உப தலைவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திம்பிய நிலையில்இ உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரியவருகையில்இ

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு தெரிவான உப தலைவரான 52 வயதுடைய வெல்லசாமி மகேந்திரன்இ கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்படிஇ வைத்தியசாலை சிகிச்சையில் சிகிச்சை பெற்று தொற்று குணமடைந்தமையினால் மீண்டும் அவர் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில்இ மீண்டும் உப தலைவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பிரதேச பரிசோதனையின் பின்னர் அவரது சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளார்.

இதனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply