திருகோணமலை – சேருநுவர பிரதேச மகாவலி வடக்கு காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய இரண்டு சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில்இ சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து ஸ்கேனர் இயந்திரம் மற்றும் மண்வெட்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கேகாலையை சேர்ந்த 41 வயது நபரொருவரும்இ கந்தளாயைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை விசேட அதிரடிப்படையினர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் இன்றைய தினம் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.






