தண்டவாளத்திலிருந்து 112 ஆணிகளை களவெடுத்த திருட்டுக்கும்பல்

கிங்தொட்ட பகுதியிலுள்ள புகையிரத தண்டவாளத்திலிருந்து 112 ஆணிகள் இனம் தெரியாத நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இதனை புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த இரண்ட தினங்களுக்குள் கிங்தொட்ட புகையிரத நிலையம் முதுல் பாலம் வரையில் 70 ஆணிகளும் பாலத்துக்கு அருகிலிருந்து ரத்கம நோக்கிய பகுதியில் 42 ஆணிகளும் அகற்றப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காலி மற்றும் ரத்கம பொலிஸாருக்கு புகையிரத திணைக்களம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் புதையல் வேட்டை! இருவர் கைது

Leave a Reply