வாகன சாரதியின் தூக்க கலக்கத்தினால் திருமலையில் இடம்பெற்ற பயங்கர விபத்து

அக்போபுர பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்றே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில், பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், வாகன சாரதி நித்திரை கலக்கத்தினால் கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியதில், குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply