கண்டி- உடபோவல வீதியின் ஒரு பகுதி, வீடொன்றின் மீது சரிந்து விழுந்தத்தில் 13 வயது சிறுமியொருவர் படுகாயமடைந்த நிலையில், பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (26) இரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டில், தந்தையுடன் சிறுமி மாத்திரமே இருந்துள்ளார்.
வீடு கடுமையாக சேதமடைந்த நிலையில், அவரது தந்தை சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
குறித்த வீதியின் பல இடங்களிலும் இவ்வாறு வெடிப்பு காணப்படுவாகவும், எதிர்வரும் காலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் மணசரிவு ஏற்படும் என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இடிந்து விழுந்த வீதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில், உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலகத்தால் கங்கவட்டகோரல பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






