
உளநல தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு!

உலக உளநல தினத்தை முன்னிட்டு ”சமமற்ற உலகில் உளநலம்” எனும் இந்த வருடத்திற்குரிய தொனிப்பொருளில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திலர் விஷேட நிகழ்வு இடம்பெற்றது.
பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள் திருமதி T.சந்திரகுமார் S.H.M.சியாம் ஆகியோரின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் நேற்று சுகாதார நடைமுறைகளுடன் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் வளவாளராக கல்முனை ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் U.M.சராப்டீன் கலந்து கொண்டதுடன், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் ,கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
உலக உளநல தினமானது ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து தேசிய மற்றும் பிரதேச ரீதியாகவும் இந்நிகழ்வானது நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..





