உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் 24 இலங்கையர்கள்!

அமெரிக்காவின் ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகம் விடுத்த அறிக்கையில், உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் அடங்குகின்றனர்.

உலகின் முன்னணி பல்கலைக்கழகமொன்று உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் தொடர்பில் விடுத்த புதிய அறிக்கையொன்றில் இலங்கையை சேர்ந்த நிபுணர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவர்களில், ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவிகே, பேராசிரியர் மெத்திகா வித்தானகே, கலாநிதி அனுஸ்கா யூ ராஜபக்ஸ ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

மேலும், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம், யாழ்ப்பாணம், பேராதனை, கொழும்பு, களனி, வயம்ப பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகளின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Leave a Reply