பண மோசடி: பொலிஸ் அதிகாரி கைது!

வந்துரம்ப பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை 10 இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் நாகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாகனம் வாங்குவதற்காக தரகர் ஒருவருடன் களுத்துறையிலிருந்து காலி நோக்கி காரில் பயணித்த போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் முச்சக்கரவண்டியில் வந்து காரை நிறுத்தி, திருட்டு பணம் தொடர்பாக தகவல் கிடைத்ததாக கூறி, அந்தப் பணத்தை கைப்பற்றியதாக, அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் 24 இலங்கையர்கள்!

Leave a Reply