துப்பாக்கி ஏந்தி நாடு முழுவதும் சோதனை செய்தலும் அரிசி கிடைக்காது!

துப்பாக்கி ஏந்தி நாடு முழுவதும் சோதனை நடத்தியும், மக்களுக்குத் தேவையான அளவு அரிசியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால் அதற்கு தற்போதைய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அத்தியாவசிய உணவுப் பொருள்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியை 65 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அரசாங்கம் குறைத்தால், அரிசியை இறக்குமதி செய்ய நாம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போது சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கீரி சம்பா கிலோ ரூ.225 ஆக விலை உயர்ந்துள்ளது.

எனினும் அரசாங்கத்தினால் வரி குறைக்கப்பட்டால், இந்தியாவில் இருந்து கீரி சம்பா, பொன்னி சம்பாவை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய முடியும்.

இதனால், 130-135 ரூபாய்க்குள் மக்களுக்கு தேவையான அரிசியை விற்க முடியும்.

தற்போது நிலவும் உர நெருக்கடி காரணமாக இந்த டிசம்பர் மாதம் முதல் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

துப்பாக்கி ஏந்தி நாடு முழுவதும் சோதனை நடத்தியும் நுகர்வோருக்கு தேவையான அளவு அரிசியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால் அதற்கு தற்போதைய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரிசிக்கான நெருக்கடியை தடுக்க அரிசி இறக்குமதியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே சட்டம்’ எதிர்காலத்தில் பக்கச்சார்பில்லாமல் செயற்பட வேண்டும்! றாசிக் றியாஸ்தீன்

Leave a Reply