உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்!

<!–

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்! – Athavan News

கொரோனா தொடர்பான உலக சுகாதார அமைப்பின் (WHO) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாளவிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொழில்நுட்ப அணுகல் குளம் (C-TAP) தொடர்பான அறிவியல், தொழில்நுட்ப மற்றும் மூலோபாய விடயங்களில் ஆலோசனை வழங்குவதற்காக உலக சுகாதார அமைப்பு ஒரு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை நிறுவியது.

கொரோனா சுகாதார தயாரிப்புகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என பலதரப்பட்ட அறிவு மற்றும் நிபுணத்துவம் கொண்ட 10 புகழ்பெற்ற நிபுணர்களை இந்தக் குழு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply