‘ஒரே நாடு ஒரே சட்டம்’ உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது! சிவநேசதுரை சந்திரகாந்தன்!

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது. அதனுடைய நோக்கம் என்னவென்று அனைவருக்கும் தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களை அதிகமாக கதைக்க விரும்பவில்லை. இது கோட்டாபய ராஜபக்சவின் முடிவின் பெயரிலேயே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது அதனுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்கு தெரியும்.

நானும் வர்த்தமானி மூலம் கோட்டாபயவின் முடிவைப் பார்த்திருந்தேன். அவர் எந்த நோக்கத்திற்காக இவரை நியமித்தார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆகவே, அவரின் நிலைப்பாட்டை என்னால் விமர்சிக்க முடியாது. என்னுடைய நிலைப்பாடு அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களுக்கான நியாயத்துடன் சேவை செய்வது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை பற்றி கதைப்பதாக இருந்தால் விரிவாக கதைக்க வேண்டும். இது பல விமர்சனங்களை கொண்டு வரலாம் அதனால் நான் கதைக்க விரும்பவில்லை.

ஞானசார தேரர் பற்றி என்னைவிட ஊடகவியலாளர் உங்களுக்கு தெரியும். எனவே, இதில் நான் கூறுவதற்கு என்ன இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply