உள்ளூராட்சி சபைத் தேர்தலை எந்த நேரத்திலும் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எந்த நேரத்திலும் நடத்துவதற்கு தயாராக உள்ளோம். தொற்றுநோய்க்கு மத்தியில் எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படுமானால், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தொற்றுநோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு திகதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ஓராண்டு வரை நீட்டிக்கும் அதிகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு உண்டு. அதை தடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை – என்றார்.