ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகமாக சமன் ரத்னப்பிரிய நியமனம்

கொழும்பு, ஓகஸ்ட் 02

தொழிற்சங்க செயற்பாட்டாளரான சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 41 கீழ் 1ஆம் பிரிவுக்கு அமைய, ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் படி, அவரது ஆலோசனைக்கு அமைய குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply