சீனி இறக்குமதி செய்வதற்கு டொலர் தொகையை வங்கிகளுக்கு விநியோகிக்குமாறு சீனி இறக்குமதியாளர்களால் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொலர் தொகையை விநியோகிக்கும் பட்சத்தில் உரிய முறையில் சீனி இறக்குமதி செய்யப்படுவதுடன், நிர்ணய விலையிலும் சீனியை விற்பனை செய்ய முடியும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டார்.
இதுதொடர்பில், இராஜாங்க அமைச்சர் மற்றும் சீனி இறக்குமதியாளர்கள் இடையே நேற்று மாலை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, சீனிக்கான கட்டுப்பாடு விலை அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், சில பகுதிகளில் அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்படுகின்றது.
வெள்ளை சீனி ஒரு கிலோ 122 ரூபாவிற்கும், சிவப்பு சீனி ஒரு கிலோ 125 ரூபாவிற்கும் விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் அறிவித்திருந்தது.






