இன்னும் 15 வருடங்களுக்கு இந்த அரசை யாராலும் கவிழ்க்க முடியாது! துமிந்த

தற்போதைய அரசாங்கத்தை 15 வருடங்களுக்கு யாராலும் கவிழ்க்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சுயதொழில் புரிவோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நாட்டில் உரப்பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை, ஆசிரியர்கள் விவசாயிகள் போராட்டப்பிரச்சனை என பல பிரச்சினைகள் இருக்கின்றன.

அரசாங்கம் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

எத்தகைய பிரச்சினை வந்தாலும் அதனை தீர்க்கும் திறன் தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளது.

இன்னும் 15 வருடங்களுக்கு இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படாது என்பதை நான் உறுதியாக கூறுகின்றேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply