இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் விளக்கமறியல்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, இந்திய மீனவர்கள் 23 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 23 பேர், இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் வழக்கு விசாரணை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது.

குறித்த மீனவர்கள் 23 பேரையும், 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், காரைநகர் கடற்படை முகாமில் தடுத்துவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

படகுகள் இரண்டும் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply