கொழும்பு, பிலியந்தலை தும்போவில பிரதேசத்திலுள்ள வீடொன்றில், தனிமையில் வசித்து வந்த நபரொருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சரத் தந்தநாராயன என்ற 60 வயது நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டதால், அவருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர், அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர், கதவை திறந்துப் பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக, குறித்த நபர் பொலிஸாருக்கு தெரிவித்தள்ளார்.
குறித்த நபர், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






