பழைய விலையில் பால்மா..! முண்டியடித்த மக்கள்

கிழக்கு மாகாண மக்களுக்காக 400 கிராம் பால்மா 380 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் முண்டியடித்து சென்றுள்ளதாக,கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எ.எல்.எம்.அஸ்மியின் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண மக்களுக்கென 2 கோடி ரூபாய்க்கு பால்மா கொள்வனவு செய்யப்பட்டு, சகல கூட்டுறவுச் சங்கங்களினூடாக விநியோகிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 3 கிலோகிராம் சீனி, 400 கிராம் அங்கர் பால்மா, 200 கிராம் தேயிலை, 1 உப்பு பக்கெட் அடங்கிய 1000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும், காரைதீவு ப.நோ.கூ.சங்கத்துக்கு 1,340 பக்கெட் 400 கிராம் பால்மாவும், 53 பக்கெட் 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டும் கொள்வனவு செய்ததாக அச்சங்கத் தலைவர் வை.கோபிகாந் தெரிவித்தார்.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை, மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றதுடன், இப்பொதியைப் பெற மக்கள் முண்டியடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply