12 – 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு  தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆராய்வு

இலங்கையில் 12 வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு  தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் மற்றும் இரண்டாவது; டோஸிற்கு எந்தவொரு தடுப்பூசியை செலுத்திக் கொண்ட போதிலும் பூஸ்டர் தடுப்பூசியாக மொடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 20 வயதிற்கு மேற்பட்டவர் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply