இந்த அரசிற்கு எதிராகச் செயற்படும் அதிகாரிகளே பதவி இழக்கின்றனர்! எஸ்.எம் மரிக்கார்

இந்த அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு எதிராகச் செயற்படும் அதிகாரிகளை பல்வேறு காரணங்களைச் சொல்லி முத்திரை குத்தி பதவியில் இருந்து இந்த அரசாங்கம் நீக்குகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம், தமது முடிவுகளை ஆதரிக்கும் அதிகாரிகளை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது.

விவசாய ஆலோசனைக் குழுவில் இருந்து பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமும் அவ்வாறானதொன்றாகும் என சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு எதிராகச் செயற்படும் அதிகாரிகளை பல்வேறு காரணங்களைச் சொல்லி முத்திரை குத்தி பதவியில் இருந்து நீக்குவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply