
இலங்கையில் சீனப்பிரஜைகள் 3 ஆயிரத்து 300 பேருக்கு தற்போது வரை சைனோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என்று இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி முதல் சீன நாட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டு வருகின்றது.
கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் சேவையாற்றும் சீனர்களுக்கே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர், மூன்றாவது டோஸ் கொடுக்கப்படலாம்.
இலங்கையில் தடுப்பூசி பெற்ற சீனப் பிரஜைகள் எவரும் இதுவரை கொரோனாத் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று இலங்கைக்கான சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.





