பிரதேச சபைச் செயலாளரை இடமாற்றக்கோரி போராட்டம்

மாந்தை மேற்குப் பிரதேச சபையின் செயலாளரை இடமாற்றக் கோரி,  சபை  உறுப்பினர்கள், பிரதேச சபைக்கு முன்பாக நேற்று அடையாள கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபையின் செயலாளரின்   ஆளுமையற்ற செயற்பாட்டாலும்,  வினைத்திறன் அற்ற முடிவுகளாலும் அபிவிருத்திகள் மற்றும் வேலைத்திட்டங்கள் அனைத்தும் பின் நோக்கிக் காணப்படுகின்றன. எழுத்து மூலச் செயற்பாடுகள் மட்டுமே இடம்பெறுகின்றன. பௌதீகச் செயற்பாடுகள் எவையும் இடம் பெறுவதில்லை என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சபையின் செயலாளர்  ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார். குறிப்பாக கொள்வனவுகள் , எரிபொருள் விற்பனை என்பவற்றில் ஊழல் மேற்கொண்டுள்ளார். அதை உறுப்பினர்கள் உறுதிப்படுத்தி வழங்கியும்,  எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply