மாத்தளை விபத்தில் குழந்தை உட்பட 13 பேர் படுகாயம்

மாத்தளை- கொலென்னேவத்த பகுதியில், பயணித்த தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்கள் மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுள் 3 வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் மற்றுமொரு வாகனமொன்றுக்கு இடமளித்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply