கோப்பாய் பொலிசாரால் சிரமதான பணி முன்னெடுப்பு!

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் யாழ் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில், கோப்பாய் பொலிஸாரால் கல்வியங்காடு சந்தை பகுதியில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலில், யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிற்குட்பட்ட பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான கோப்பாய் பொலிசாரால் சிரமதான பணி நடைபெற்றுள்ளது.

இப் பணி இன்று காலை, கல்வியங்காடு சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்டமையோடு, நல்லூர் பிரதேசசபை உதவியுடன் கழிவகற்றல் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply