
ஆசியக் கால்ப்பந்தாட்ட கிண்ண 23 வயதுக்குட்பட்ட தகுதி காண் போட்டித் தொடரில் சிரியா அணியுடனான போட்டியில் 5ற்கு 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இலங்கை தனது இரண்டாவது போட்டியில் இன்று கட்டாரை எதிர்த்தாடவுள்ளது.
இப்போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கட்டார் நாட்டுத் தலைநகரான தோஹாவில் நடைபெறும் ஏ குழுவிற்கான தகுதிகாண் போட்டித் தொடரில் இலங்கை, கட்டார், ஜேர்மன், சிரியா ஆகிய நாடுகளின் 23 வயதிற்குட்பட்ட கால்ப்பந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன.
இலங்கை மற்றும் கட்டார் அணிகளின் போட்டியையடுத்து சிரியா மற்றும் ஜேர்மன் இணிகளுக்கிடையிலான போட்டி இலங்கை நேரப்படி 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.






