யாழ்ப்பாண பொலிஸாரின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை பண்ணை சுற்றுவட்ட பகுதியில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த சிரமதானப் பணியில் ஆர்வமுள்ளோர் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண நகரத்தை சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதற்காக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் எம்முடன் இணைவீர் எமது சூழலுக்காக என்னும் தொனிப்பொருளில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ் பிராந்திய பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவின் ஏற்பாட்டில், யாழ் மாநகர சபை, யாழ் மாவட்ட திரிசாரணர்கள், லயன்ஸ் கழகம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை காலை 7 மணியளவில் கோட்டையை சுற்றியுள்ள சூழலை சிரமதான பணிமூலம் தூய்மைப்படுத்தவுள்ளனர்.
குறிப்பாக, யாழ் மாவட்டம் முழுவதிலும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் குறித்த சிரமதான பணி, கடந்த வாரத்திலிருந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நெறிப்படுத்தலில் பண்ணை சுற்றுவட்டம் அதனோடு இணைந்த கடற்கரை பகுதியை சுத்தம் செய்யும் நோக்கில் சிரமதானபணி இடம்பெறவுள்ளது.






