வவுனியாவில் சிங்கள குடியேற்றம் தொடர்பில் அனைத்து கட்சி கூட்டம்!

வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றம் தொடர்பில் அனைத்து கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளுக்கிடையிலான கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையின் அமைப்பாளர் நடராஜா கருணாநிதியின் ஏற்பாட்டில், நகரசபை மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்திற்கு ஈ.பி.டி.பி தவிர்ந்த, அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி அமைப்பாளர் ந.கருணாநிதி தெரிவித்தார்.

சிங்கள குடியேற்றத்தை ஒன்றிணைந்து எதிர்க்கும் பொறிமுறையை உருவாக்கும் பொருட்டே குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply