சேதன உரத்தை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாய செய்கைக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்!

சேதன உரத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் முன்னெடுக்கும் விவசாய செய்கைக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம் அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது

கிளிநொச்சி மாவட்டத்தில் கால போக செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் இந்த பயிர் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.

கிளிநொச்சியில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் பிரதான தொழிலாக காணப்படுகின்றது. ஆகவே, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரவைகளை அடையாளம் கண்டு, எதிர்வரும் காலங்களில் அவற்றுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது, சேதன விவசாய செய்கையை மேற்கொள்வதற்கு கால்நடைகளின் தேவையும் ஒன்றாக காணப்படுகின்றமையால், கால்நடைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது என அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதி. நீர்ப் பாசன பணிப்பாளர், இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், விவசாயத் சார் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட மேலதிக அரச அதிபர், கரைச்சி கண்டாவளை பூநகரி பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்

Leave a Reply