கொரோனாவால் 22 பேர் நேற்று உயிரிழப்பு!

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 22 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுளளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,696 ஆக அதிகரித்துள்ளது.

30 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவர் மாத்திரமே நேற்று உயிரிழந்ததாகவும், 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 06 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 15 பேரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 3 ஆண்களும் 3 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 6 ஆண்களும் 9 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply