நாட்டில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் நவம்பரில்!

நாட்டில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளை நவம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதன்போது, 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரத்துறை, பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட கொரோனா ஒழிப்பில் முன்னிலை வகிப்பவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.

மேலும், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்கள், விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமையளிக்கப்படும்.

அதன்பின்னர், படிமுறையாக விசேட தேவையுடையவர்கள் மற்றும் ஏனையோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.

இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு 6 மாதங்களின் பின்னரே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

அதற்கமைவாக, நவம்பர் மாதம் முதல் இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply