வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடிப்பு!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இன்று வீட்டில் யாருமில்லாத நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை, அவதானித்த அயலவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

குறித்த சம்பவத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் பகுதியளவில் எரிந்துள்ளது.

இதுதொடர்பில், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட நிலையில், பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply