சி.ஐ.டிக்குப் பதிலளிக்க கால அவகாசம் கோரிய அருட்தந்தை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இணையத்தள விவாதம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் நேற்று அறிக்கை சமர்ப்பித்தது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி அண்மையில் இடம்பெற்ற காணொலி கலந்துரையாடலின்போது வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று அழைக்கப்பட்டிருந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

எனினும், அருட்தந்தை சிறில் காமினி, தமக்கு ஒரு வார கால அவகாசத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் தாம் தொடர்பில் பொய்யான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்று அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply