மேலும் 540 பேருக்கு இன்று தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 540 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 538,860 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 7,487 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 511,863 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply