
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு மீன் வியாபாரம் என்ற பெயரில் மீன் பெட்டியில் 50 போத்தல் கசிப்பினைக் கொண்டு சென்ற விசுவமடு வாசியினை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவில் கசிப்பு வியாபாரம் இடம்பெற்று வருகின்றமை சமூக ஆர்வலர்கள் மற்றும் குடும்ப பெண்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரந்தன்-புதுக்குடியிருப்பு வீதியில் புதுக்குடியிருப்பு நோக்கி மீன் வியாபாரம் என்ற போர்வையில் 55 போத்தல் கசிப்பினை 20 ரூபா பைகள் 6ல் நன்றாக கட்டி மீன்பெட்டியில் வைத்து அதன்மேல் மீண்டும் பையினைபோட்டு அதற்கு மேல் மீண்டும் மீன்களை போட்டு மீன் வியாபாரம் என்ற பெயரில் புதுக்குடியிருப்பில் முக்கிய கசிப்பு வியாபாரிகளிடம் கைமாற்றுவதற்காக கொண்டு சென்றபோது புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட 55 போத்தல் கசிப்புடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளிலும் காவல்துறையினரால் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவரை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.





