
கோப்பாய் ஊரெழுபகுதியில் வசித்துவந்த சிறுமிஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரைமாய்த்துள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பி.ப 1.30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதே பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ் இலக்கியா (வயது – 14) என்ற சிறுமியே இவ்வாறு உயிரைமாய்த்துள்ளார்.
பொலிஸார் சடலத்தை மீட்டு, யாழ். போதனா மருத்துவமனையில் சேர்த்தனர். மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





