நாட்டில் கடன் வசதிகளை பெற முனையும் மக்களுக்கு இலகுவான முறையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, பொதுமக்களுக்கு நிதிக் கடன் வசதிகளை வழங்குவதில் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் CRIB பதிவுகளைப் பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் வங்கிகளிடமும் இந்தக் கோரிக்கையை இலங்கை மத்திய வங்கி முன்னதாகவே விடுத்திருந்தது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக நிதி நெருக்கடியில் உள்ள மக்கள் வாங்கிய கடன்களில் சில தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு மத்திய வங்கி இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.






