நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் இணைப்பாளர்கள் இருவருக்கு பூநகரியில் 190ஏக்கர் அரச காணி அனுமதிப்பத்திரம் வழங்கிக் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆளுகையில் உள்ள காணிகளில் இருந்தே இந்த 190ஏக்கர் காணியும் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இணைப்பாளர்கள் இருவரில் ஒருவருக்கு 130 ஏக்கரும், மற்றவருக்கு 60 ஏக்கரும் என்ற அடிப்படையில் கொழும்பு அனுமதியின் பெயரில் இந்தக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிகின்றது.
விவசாய நடவடிக்கைகளுக்கு முதல் கட்டமாக 30 ஆண்டுகள்குத்தகை என்னும் அடிப்படையில் இந்த நிலங்களை ஆணைக்குழு வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.






