மின் கட்டணத்தை தொடர்ந்தும் செலுத்தாதவர்களின் மின் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு, மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் மாதாந்த கட்டணத்தை செலுத்தக்கூடியவர்கள் கூட அதைத் தொடர்ந்து செலுத்தவில்லை.
இந்த நிலையில், பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்னர் சிவப்பு பட்டியல் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்
இதேவேளை, அவ்வப்போது மின்கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மேலும் தெரிவித்துள்ளார்.






