
நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இன்றைய தினமும் (29) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.
இதனிடையே, திருகோணமலை – காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





