அரச – தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அவசியமான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை கருத்தில் கொண்டு,அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு இடம்பெறாவிட்டால், எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றால் தாமும் என அனைத்து நிறுவனங்களின் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார மற்றும் ஜே.வி.பியின் நிர்வாக செயலாளர் கே.டி. லால்காந்த ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.






