
ஐக்கிய அமீரகத்தில் தற்போது டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்திருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மட்டுமே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக ஆடவில்லை. ஆகையால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் போனது.
இதையடுத்து, பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபார் அசாம் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதி வரை அவுட் ஆகாமல், பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்தனர். உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணி வென்றது இதுவே முதல் முறையாகும்.
இந்தியா தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை வரும் அக்டோபர் 31ஆம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி தோற்றால், அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி உள்ளதால், அடுத்த ஒரு போட்டியில் பிளேயிங் 11ஐ மிகத்துல்லியமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்திய அணியில் 2 பேருக்கு பதிலாக மாற்று வீரர்களை களமிறங்கலாம் என கிரிகெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவால் காயத்திற்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே முறையாக பந்து வீச முடியவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 போட்டிகளில் பங்கேற்ற அவர் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே பந்துவீசி உள்ளார். பேட்டிக்காக அவரை தேர்வு செய்துள்ளனர் என்றாலும் அவர் அதிலும் சிறப்பாக பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. கடந்த போட்டியில் 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு தரலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சமீபகாலமாக ஃபார்மில் இல்லை. அவரது பந்துவீச்சை எளிதாக விளாசித் தள்ளி விடுகின்ற்னர். ஆகையால் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு தரலாம். இது அணியின் பந்துவீச்சை மேலும் பலப்படுத்தும் என கூறப்படுகிறது.





