‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனது பதவியை சிறப்பாக செய்வேன்! ஞானசார தேரர்

தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவி நடவடிக்கைகளை முயன்றளவு சிறப்பாக செய்வதற்கு எதிர்பார்த்துள்ளேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக தம்மை நியமிப்பது தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நாட்டில் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது காட்டை சுத்தப்படுத்துவது போன்றது. இந்த பதவியின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டவர்களுடன் முதலில் கலந்துரையாடி, பணியை முழுமையாகச் செய்ய எதிர்பார்த்துள்ளேன்.

அத்துடன், இந்தப் பதவிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட குழுக்களுடன் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply